மனிதனை படைத்த நோக்கம் என்ன

  இன்றைய சிந்தனைக்கு 


இறைவன் மனிதனை படைத்ததின் நோக்கம் என்ன என்பதை பார்ப்போம் 


ராமலிங்க வள்ளலார் பிறவா நிலை வேண்டும் என்று வேண்டுகிறார் இதிலிருந்து ஒன்று அறிய முடிகிறது மனிதனாக பிறந்தவன் மீண்டும் மனிதனாக பிறக்கக் கூடாது என்று 


இறைவன் பார்வையில் அனைத்து மனிதர்களும் தான் விரும்பிய பாதையில் செயல்பட வேண்டும் என்பதே 


மனிதன் என்பவன் எண்ணற்ற பிறவிகளை எடுக்கக் கூடியவனாக உள்ளான் காரணம் அவன் இறைவன் விரும்பிய வாழ்க்கையில் வாழாததின் காரணமாக 


இறைவன் விருப்பத்தை எப்போது நிறைவேற்றுகிறானோ அப்போது அவன் மனிதப் பிறவியில் இருந்து விடுவிப்பேன் என்கிறார் 


இறைவனின் விருப்பம் என்பது இந்த உலகப்பற்றிலிருந்து விடுபட்டு வாழக்கூடிய தன்மை கொண்டதாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்


இந்த கருத்து உறுதிப்படுத்துவதற்கு சில மனிதர்களை வாழ்க்கையின்மூலம் உறுதிப்படுத்துகிறார் 


உதாரணத்திற்கு   அரசனுக்கு நிகரான செல்வத்தை உடையவர் பட்டினத்தார் அனைத்தையும் தொடர்ந்து அடுத்த வேலை உணவிற்கு யாசகம் செய்து வாழ்ந்தவர்

இந்த தன்மையில் பல மனிதர்கள் வாழ்ந்துள்ளனர் 


இத்தகைய மனிதர்கள் திடீரென்று ஒரு நாள் இந்த முடிவை எடுக்கிறார்கள் காரணம் பல பிறவிகளில் இந்த தன்மையில் செயல்பட்டதினால் இந்த முடிவு எடுக்க முடிகிறது 


மனிதன் ஒவ்வொரு பிறவியிலும் மரணத்தின் போது அவன் வாழ்க்கை எவ்வாறு வாழ வேண்டும் என்ற தத்துவத்தை அவனுடைய பார்வையில் அமைத்துக் கொண்டு மரணிக்கிறான் 


இந்தத் தன்மை ஒவ்வொரு மனித இடத்தில் வெவ்வேறு பட்டிருப்பதை பார்க்க முடியும் 


எனவே மனிதன் ஒவ்வொரு பிறவிலும் எது சரியான வாழ்க்கை என்று தீர்மானித்துக் கொண்டு மரணிக்கிறான் 

.

எனவே மனிதன் மரணத்தின் போது பாவ புண்ணியத்தை மட்டும் கொண்டு போவதில்லை அவன் பெற்ற அனுபவத்தையும் கொண்டு செல்கிறான் 


இந்த அனுபவம் எப்போது இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றும் தன்மை கொண்டதாக உள்ளதோ


அப்பொழுது அவன் மனித பிறவியிலிருந்து விடுபடுகிறான் 


அதனால் தான் மனிதன் கணக்கற்ற பிறவிகலைஎடுக்க வேண்டியவனாக உள்ளான் 


அழிவற்ற ஆத்மாவை கொண்டுள்ள மனிதன் இறைவனிடம் சேரவேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாக உள்ளது


இந்த நிலையை அடைய வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனுடைய இலக்காக அமைத்து வைத்திருக்கின்றான் இறைவன்


அதனால் தான் நாம் இறைவனை அவனின்றி ஓர் அணுவும் அசையாது

 என்கிறோம்


ஓம் நமோ நாராயணாய








Comments