வாழ்க்கையின் இலக்கு

மனிதனுக்கு உரிமையானது 

இன்றைய சிந்தனைக்கு

மனிதனுக்கு உரிமையானது

இறைவனின் பேராற்றல் அளப்பரியது ஏனென்றால் இறைவன் அனைத்தையும் இரண்டு தன்மைகளைக் கொண்டு செயல்படுத்துகிறார் ஒரு கிரகம் இயங்குவதற்கு மற்றொரு கிரகம் துணை புரிய வேண்டும் ஒரு கரு உருவாவதற்கு ஆண் பெண் தேவைப்படுகிறது இந்த பிரபஞ்சம் விரிவடைவதற்கு 2 செயல்பாடுகள் தேவையாக உள்ளது தனித்து எந்த ஒரு செயல்பாடும் இயங்காது இதன் அடிப்படையில்தான் மனித வாழ்க்கையும் இரண்டு தன்மையில் அமைத்திருக்கிறார் 

ஒரு தன்மை  இந்த உலகில் வாழும் மனிதன் தனக்கு உரிமையானது அனைத்தும் இந்த பூவுலகில் வாழும் வரை தான் உரிமையாக்கி வைத்திருக்கின்றான்

ஒவ்வொரு மனிதனும் தன் குழந்தைதான் நமக்கு உரிமையானது என்று நினைக்கிறான் ஆனால் அந்த குழந்தையோ அவன் செய்த கர்மாவின் கணக்கை தீர்ப்பதற்காக இந்த பூமியில் வந்து பிறக்கிறது

 மரணத்திற்குப்பின் எந்த ஒரு உரிமையுள்ளதை உரிமை அற்றதாக அமைத்து இருக்கின்றான் ஏன் அவனுடைய ஆற்றலும் இங்கேயே விட்டுவிடுகிறான் அதனால்தான் மரணத்தின்போது சுயநினைவற்ற இந்நிலையில் மரணிக்கின்றான்

மற்றொரு தன்மை ஒரு மனிதன் மரணத்தின்போது அவன் வாழும் காலத்தில் செய்த நல்வினை தீவினைகள் மட்டுமே  எடுத்துச் செல்கின்றான் இது மட்டுமே அவனுக்கு உரிமையானது

இந்தப் பதிவை மரணத்தின்போது ஒவ்வொரு மனிதனிடம் தரப்படுகின்றது

இதுதான் மறு பிறப்பிற்கான விதியின் ஆதாரம்

இப்பொழுது மனிதன் பிறந்திருப்பது அவன் முன் செய்த முன்ஜென்மத்தில் செய்த நல்வினை தீவினைகளை  வாழ்க்கையை அனுபவித்து வாழ்க்கையை  மரணிக்க வேண்டும்

அதனால்தான் ஒவ்வொரு உடைய மனித வாழ்க்கையும் வேறு பட்டிருப்பதால் இந்த உண்மை உறுதிப்படுத்தப்படுகிறது

இறைவன் கணக்கெடுப்பில் வல்லவன்

எனவே யார் ஒருவர் நம் செயல்கள் தான் நம் வாழ்க்கை வாழ்க்கையை தீர்மானிக்கிறது
இந்த உண்மையை எவன் நம்பிக்கை கொள்கிறானோ அவன் எந்த ஒரு உயிரினத்திற்கும் எந்த ஒரு நபருக்கும் பொதுமக்களுக்கும் தீங்கு செய்ய மாட்டான் நமக்கு உரிமை இல்லாததை தன் திறமையால் அபகரிக்க முயற்சிக்க மாட்டான்

ஆனால் இன்று மனித சமுதாயம் அறிவியல் மேன்மை பட்டு இருக்கிறான் ஆனால் அவன் வாழ்க்கையின் தரம் அவல நிலையில் உள்ளது தனக்கு உரிமையானது எது என்று அறியாது வாழ்ந்து கொண்டிருக்கின்றான்

எனவே நமக்கு எது உரிமையானது என்பதை அறிந்து வாழ்வோம் மேன்மை பெறுவோம்


ஓம் நமோ நாராயணாய

Comments