கர்மா

முன்னோர்களின் சாபம் அவர் வாரிசுகளுக்கு தரப்படுகிறதா

 


முன்னோர்களின் சாபம் அவர்களின் வாரிசுக்கு தரப்படுகிறது இது உண்மையா

இந்த கருத்து பெரும்பான்மையான மக்கள் உண்மை என்று நம்புகின்றனர் ஆனால் அது உண்மை இல்லை


 ஏனென்றால் இறைவன் ஒவ்வொரு படைப்பையும் புதிய படைப்பாக தான் படைக்கிறான் அதனால் தான் ஒவ்வொரு மனிதனுடைய கைரேகை ஒத்துப் போவதில்லை மற்ற மனிதர்களுடன்

ஒரு தனிமனிதனின் செயல்பாட்டின் விளைவு அந்த தனி மனிதனுக்கு மட்டுமே உரிமையானது அது எந்த ஒரு மனிதனுக்கும் தருவதற்கு தர்மம்  இடம் தராது

ஒரு மனிதன் செய்கின்றனநல்ல செயல் ஆனாலும் தீயசெய்யல் ஆனாலும் அதன் எதிர் விளைவு அந்த மனிதனிடமே கொண்டுசேர்க்கும் பிரபஞ்சம்

இதை மாற்றுவதற்கு எந்த சக்திக்கும் அனுமதி இல்லை

பாவங்கள் செய்கின்ற ஆத்மாக்கள் அந்த குடும்பத்தில் மீண்டும் மீண்டும் புதிய படைப்பாக படைக்கிறார் இறைவன்


மேலும் ஒரு ஆத்மா பல பிறவிகளை எடுக்க தன்னை கொண்டது


ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் அது முன்னோர்களின் ஆத்மாவாக விளங்குகிறது இவ்வாறு ஒவ்வொரு மனிதனுடைய பாவ புண்ணியங்களை சரி  செய்கிறார்


எப்பொழுது ஒரு குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லாமல் போகிறதோ அப்போதே அந்த குடும்பத்தின்  பாவ புண்ணியக் கணக்குகள்சரி செய்யப்படுகின்றன


இறைவன் அனைத்து படைப்புக்களையும் கணக்கின் அடிப்படையிலேயே இயக்குகிறான்


அதனால்தான் பாவங்கள் செய்யாத ஆத்மாக்களுக்கு மட்டுமே பிறவியிலிருந்து விடுதலை தருகிறார்


ஒரு மனிதனின் பிறப்பு என்பது அவன் முற்பிறவியில் செய்த நற்செயல் தீய செயல் செய்தவைகளுக்கு ஏற்ப நன்மை தீமைகளை அனுபவிக்கும்படி செய்கிறான்


அதனால்தான் இப்பிறவியில் துன்பங்களிலிருந்து விடுதலை பெறாமல் தீர்வு கிடைக்காமல் அனுபவித்து வாழ்கிறான் இவ்வாறு அவன் செய்த செயல்களுக்கு துன்பத்தை அனுவித்து கணக்கு நேர் செய்கிறான்


ஒரு மனிதன் துன்பத்தில் வாழ்கிறான் என்றால் அவன் செய்த செயல்களுக்கு தண்டனை பெற்றுக் கொண்டிருக்கிறான் என்பது பொருள்

இவ்வாறு தனது கர்ம பதிவை நேர் செய்கிறான்


இறைவன் கணக்கு எடுப்பதில் வல்லவன்

இறைவன் மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்


இறைவன் நியாயமானவர் தர்மவான் தண்டனை அளிப்பதில் வல்லவர்


எனவே முன்னோர்களின் சாபம் அவன் வாரிசுகளுக்கு கொடுப்பதில்லை தவறு செய்தவரே அந்த குடும்பத்தில் மீண்டும் பிறக்கிறார்



ஓம் நமோ நாராயணாய

Comments