அதிகாரம்

அதிகாரம் என்ற சொல்லின் வாழ்வு 


இறைவன் செயல்பாட்டில் மிகவும் வியப்புக்குரியது என்னவென்றால் நன்மையும் தீமையும் ஒன்றிலேயே அமைந்திருப்பதுதான்

ஒரு மனிதனுக்கு அதிகாரம் தன்மை எப்போது வருகிறது என்றால் அவன் பெறுகின்ற பட்டங்கள் பதவிகள் அளவுகடந்த சொத்துக்கள் பெறுகின்ற பொழுது

இத்தகைய சிறப்புகளைப் பெற்ற மனிதன் நிச்சயமாக பிற மனிதனை அடிமைபடுத்தும் செயலை தான் பெரும்பான்மையான மக்கள் செயல்படுத்துவார்கள்
இந்த வெகுமதி மனிதனுக்கு தரப்பட்டிருப்பது வரமா அல்லது சாபமா என்று கேட்டால் நிச்சயமாக இது சாபம் தான்

இதற்கு அத்தாட்சியாக இருப்பது காவல்துறை இடத்தில் தந்திருக்கும் சிறிய அதிகாரம் மக்களை பாடாய் படுத்துகிறது
ஒரு மனிதன் பெற்ற அதிகாரம் மற்றொரு மனிதனை மனதால் மிகவும் வருத்தம் படியாக செயல்படுவான் அல்லது அடிமைப்படுத்த நினைப்பான்

அதிகாரம் பெற்ற மனிதன் வாழும் காலத்தில் நன்மையை காட்டிலும் தீமையே அதிகம் செய்யும் தன்மை உடையவனாக இருக்கிறான்

அதனால் அவன் பாவச் சுமையை சுமந்து கொள்கிறான் அதிகமாக

இந்தப் பாவ கணக்கை அனுபவித்து பாவ கணக்கு கடனை தீர்க்க  வேண்டும் என்பதற்காக தான் பிறப்பினை உருவாக்குகிறான்

நாம் இப்பொழுது வாழ்கின்ற வாழ்க்கையின் தன்மையானது பிறப்பின்போது தரப்பட்ட பாவ-புண்ணிய கணக்கின் அடிப்படையில் இங்கிக் கொண்டிருக்கிறது

ஒவ்வொரு மனிதனும் வாழும்காலத்தில் சந்திக்கின்ற துன்பங்கள் ஆனது எந்த மனித சக்தியாலும் தீர்வு காண முடிவதில்லை ஏனெனில் அவன் கர்மாவின் படி துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பது விதி இதனை எதிர்த்து எந்த மனித சக்திக்கும் தரப்படவில்லை

இதற்கு மிக சிறப்பான உதாரணம் அனைத்து சிறப்பு தகுதி பெற்றுள்ள காலஞ்சென்ற முதல்வர் ஜே ஜே அவர்களின் இறுதி வாழ்க்கை சாட்சியாக இருக்கிறது
இறைவன் ஒன்றைதீர்மானித்து விட்டால் அதை மாற்று எந்த மனித சக்தியாலும்தடுக்க இயலாது


அதிகாரம் பெற்ற மனிதன் நிச்சயமாக பிற மனிதனை அடிமைப்படுத்தும் படிதான் முயற்சிப்பான் அது அவனுடைய இயல்பமாக அமைந்திருக்கும் அந்த அளவுக்கு வலிமை மிக்கது அதிகாரம்

எனவே ஒரு மனிதனுக்கு இறைவன் அதிகாரம் தருகிறான் என்றால் அதனை முறையாக பாதுகாக்கப்பட வேண்டிய பொறுப்பு அந்த மனிதனுக்கு இருக்கிறது
இல்லையென்றால் அந்த அதிகாரமே அவனை நரகத்தில் கொண்டு சேர்த்து விடும்
எனவே அதிகாரம் பெற்ற மனிதன் மற்ற மனிதர்களை விட அச்சத்துடன் வாழ வேண்டியவன்
ஓம் நமோ நாராயணாய

Comments