சுகமானவாழ்க்கைவாழ எது தேவை

சுகமாக வாழ்வதற்கு தேவையானவை எவை?

மனிதன் சுகமாக வாழ என்ன செய்ய வேண்டும

இறைவன் மனிதனை மனம் உயிர் ஆத்மா இவை மூன்றும் கொண்டு படைத்திருக்கின்றான் இவைதான் மனிதனுக்கு ஆதாரம் இதில் கதாநாயகனாக இருப்பது மனம் இதை யார் சிறப்பாக செயலாற்றுகிறார்கலோ அவர்களால் மட்டுமே சுகமாக வாழ இயலும்

இத்தகைய சிறப்புமிக்க மணதை யாரொருவன் துன்பப்படுத்தி கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்கிறானோ அவனால் மட்டுமே சுகத்தை அறிய இயலும்

மனம் என்பது கண்ணால் பார்க்க முடியாத ஒன்று அதனால் தான் மனிதன் என்பவன் இறைவனின் பிரதிநிதியாக இருக்கின்றான் என் என்றால் இறைவனையும் கண்ணால் பார்க்க இயலாது

பார்க்க முடியாத தன்மை கொண்ட மனம் இருப்பதால் பார்க்க கூடியவைகள் எதுவும் மனதுக்கு தேவையற்றவை

பார்க்க முடியாத மனதை பார்க்கக்கூடிய உடலில் குடி கொண்டிருப்பதால் தேவையானவை நிறைவேற்றும் பொறுப்பு மனதிற்கு உள்ளது எனவே தான் அவனுக்கு பொருள் தேவை அவசியமாகிறது

இந்தத் தேவையை நிறைவேற்றுவதற்கு மனித இயக்கம் நடைபெறுகிறது

மனித இயக்கம் என்பது மனதை செம்மைப் படுத்திக் கொள்வதற்காக தரப்பட்டிருக்கிறது வாழ்வின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கு செயல்படுகிறது 

இந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மனிதன் மனதை துன்பப் படுத்திக் கொள்ளாமல் வாழும் வழிமுறைகள் அறிந்திருக்கிறார்கலோ அவர்களே சுகமான வாழ்க்கையை வாழ இயலும்

இதற்கான வழிமுறைகள் எண்ணற்றவை கொண்ட கொண்டிருக்கின்றன இவைகளை எந்த மனம் அறிந்து கொண்டு செயல்படுகிறதோ அந்த மனமே செம்மை படுத்தப்பட்ட  மனமாகும்

அதனால்தான் திருமூலர் கூறுகிறார் மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க தேவையில்லை என்று

மனதை செம்மைப் படுத்துவது என்பது வாழ்க்கை வாழ்வதற்கு எது தேவை எது தேவையற்றது என்ற புரிதல் மனித மனதிற்கு தேவையாக உள்ளது இதை ஒரு மனம் புரிந்து விட்டால் நிச்சயமாக அது எந்த இந்நிலையிலும் வருத்தப்படாது

சுருங்க கூற வேண்டுமென்றால் மனமானது எந்த சூழ்நிலையிலும் வருத்தப்படாமல் செயல்படும் தன்மையை உருவாக்கிக் கொள்கிறானோ அதற்கான வழிமுறைகளை அறிந்து இருக்கிறானோ அவனே புரிதலில் தேர்ச்சி பெற்றவன்

இதற்கான வழிமுறைகள் எண்ணற்றவை இறைவன் ஏற்படுத்தி இருக்கின்றான்

இதற்கு சிறப்பான உதாரணம் ஒன்று கூற வேண்டும் என்றால் பணம் ஒரு மனிதனுக்குத் தேவை தான் ஆனால் பணத்திற்காகவே வாழ்வது என்பது மூடன் செயலாகும் இது மனிதனை துன்பப்படுத்தி கொள்வதற்கான செயலாகும்
மனிதனுடைய விருப்பங்கள் தான் மனம் செம்மைப் படுத்துவதற்க்கு காரணமாக இருக்கிறது

எனவே மனிதனின் சுகமான வாழ்க்கைக்கு அவனுடைய விருப்பங்கலே ஆதாரமாய் இருக்கின்றது

மனிதனுடைய விருப்பங்கள் எதன் அடிப்படையில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் எதிர்கால வாழ்க்கை மறுமை வாழ்க்கை சுகமாக வாழ்வதற்கு எந்தத் தன்மையில் செயல்பட்டால்  வாழலாம் என்கின்ற கலையே புரிதலாகும்

சுகமாக வாழ்வது என்பது ஒரு கலை அதற்கு மதிநுட்பம் தேவையாக உள்ளது

ஏனென்றால் இதற்கு எல்லையற்றவழிமுறைகளைஇறைவன் அமைத்திருக்கிறான்

ஓம் நமோ நாராயணாய





Comments