இறைவனும் மனிதனும்

 மனிதன் இந்த பூமியில் உரிமை கொள்வதற்கு எதர்க்கும் உரிமை இல்லை என்பதற்கான விளக்கம் பதிவு


மனிதனுக்கு இந்த பூமியில் எதுவும் உரிமை இல்லை என்பதை மனிதன் அறிந்து கொள்வதற்காகவே மனிதனுடைய வாழ்க்கையில் எண்ணற்ற நிகழ்வுகளை ஏற்படுத்தி இருக்கிறான் 

இதற்கு முதல் அத்தாட்சியாக மனிதப் பிறப்பு அமைந்திருக்கிறது ஏனென்றால் மனிதன் பிறக்கும் போது எதுவும் அறியாத நிலையில் தான் பிறக்கிறான் பிறப்பின் சூழ்நிலையானது மனிதனின் விருப்பப்படி அமைவதில்லை வாழ்க்கையின் தொடக்கமே மனிதனுடைய உரிமை பறிக்கப்படுகிறது

இரண்டாவது வாழ்க்கையின் ஆரம்பம் முதல் இறுதிவரை மரணம்வரை அவன் விரும்புகின்ற நிகழ்வுகள் எதுவும் அமைவதில்லை இதனால் வாழும் காலத்தில் அவன் உரிமை இயந்துதான் செயல்படுகிறான் 

இதனால் வாழும்ங்காலத்திலும் அவன் உரிமை பறிக்கப்படுகிறது

ஒரு மனிதன் எவ்வளவு சிறப்பு பெற்றவனாக இருந்தாலும்  அறிவுக்கூர்மை உடையவனாகிய செயல்பட்டாலும் ஒரு நாட்டை ஆளக்கூடிய  தி றமையுடையவனாக இருந்தாலும் அவனுடைய மரணம் தன் நிலையை மறந்து தான் மரணிக்கிறான் இங்கேயும் அவனுடைய உரிமை பறிக்கப்படுகிறது மரணத்தின் போது தன் குடும்ப உறுப்பினர்களிடம்கூட உரிமை அளிக்கப்படவில்லை

இவ்வாறு மனிதனை இறைவன் ஆனவன் எதன்மீதும் உரிமைகொள்ளாமல் அவனை இயங்கும்படி செய்கிறான்

ஏனவே  மனிதன்  வெளி பார்வையில் சுதந்திரமாக செயல்படுகிறேன் என்று கூறினாலும்  இறைவன் விதித்த விதிகளையே கடைப்பிடிக்கவேண்டிய வனாக  இருக்கின்றான்

எனவே மனிதன் என்பவன் இறைவனின் அடிமை தான் என்று கூறினால் மிகையாகாது

எனவே அடிமைக்கு ஏது உரிமை மனிதன் தன் குடும்பத்திற்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் பயன்படுத்தி குடும்ப நபர்களை பாதுகாக்கிறான் ஆனால் அந்த நபர்களில் ஒருவர் மரணித்து விட்டா இவ்வாறு மனிதன் வாழும் காலத்தில் இருந்து சில நாட்களிலேயே அவரை பற்றி வருத்தம் கொள்வதில்லை காரணம் வாழும் வரை தான் உறவு

எனவே மனிதனுக்கு தரப்பட்ட அவை அனைத்தும் பயன்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே உரிமை கொள்வதற்காக அல்ல என்பது உறுதியாகிறது

எனவேதான் இறைவன் கூறுகிறான் நீ வாழும் வாழ்க்கை தான் உனக்கு உரிமையானது 

எனவே நீ புறத்தில்  உருவாக்கி வைத்திருக்கின்றன பிரம்மாண்ட உடமைகள் நீ உயர்வாக கருதுகின்ற எது ஒன்றும் உனக்கு பயன்படாது

ஆனால் மனிதனோ தன் குடும்பத்திற்காக அனைத்து தீய செயல்கலை செய்து மனித விரோத செயல்களை செய்து பொருள் சேர்க்கையில் ஆர்வம் செலுத்துகிறான் 

எனவே மனிதனை எந்தத் தன்மையில் இறைவன் படைத்திருக்கிறான் என்பதை அறிந்து செயல்பட்டால் தான் மனித வாழ்க்கை  சுகமான வாழ்க்கை வாழ இயலும்

Comments

Popular Posts