இறை கட்டளை
சுகமாக வாழ்வதற்கு இறை கட்டளை ஏன் அவசியம்?
மனிதன் சுகமாக வாழ்வதற்கு இறைவன் வகுத்த வழிமுறைகள் மிக எளிமையானது அதற்கான விளக்க பதிவு தான் இது
மனிதன் சுகமாக வாழ வேண்டும் என்றால் இறைவன் வகுத்த வழியில் ஒரு மனிதன் செயல்படாத வரையில் அவன் வாழ்க்கை சுகம் அறிய இயலாது
ஒவ்வொரு மனிதனும் சுகமாக வாழ்வதற்கு மனிநனைபடைத்தேன் என்கிறார் இறைவன்
ஆனால் அதற்கான வழிமுறைகள் அறியாமல் தன் மனம் போன போக்கில் செயல்பட்டு எண்ணற்ற துன்பங்களை வர வைத்துக்கொள்கிறார்கள்
மனிதப் பிறப்பு என்பது அவன் செய்த பாவங்கள் காரணமாக தான் மனிதபகறபாபு எடுக்கிறான்
மனிதப் பிறப்பின் இலக்கு மனிதப் பிறவியில் இருந்து விடுபடுவது ஆகும்
இந்தத் தன்மையில் ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் மனிதனுக்கு வழிமுறைகளை வகுத்துள்ளான்
இதற்காக இறைவன் கடுமையான வழிமுறைகளை அமைக்க வில்லை
மிக எளிமையாக தான் வைத்துள்ளான் அவற்றில் மிகச் சில
எந்த ஒரு மனிதனுக்கும் தம்எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் பிறருக்கு தீங்கு விளைவிக்காமல் தன் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்
இறைபண்புகளை உரிமையாக்கிக் கொள்ள வேண்டும்
மனிதன் பிறக்கும் போது சில தீய குணங்களுடன் படைக்கிறான் அதனை நீக்கி கொள்ளாதவரை அவன் வாழ்க்கையில் சுகம் காண இயலாது
மனித படைப்பை பிறர் நலனுக்காக படைக்கப்பட்டு இருக்கிறது என்கிறார் எனவே தம்மால் இயன்ற நற்செயல்களை அமைத்துக் கொள்ள வேண்டும்
வரலாற்றைப் பார்த்தோமானால் நற்செயல்கள் செய்தவர்கள் மரணத்திற்குப் பின் இன்றும் போற்றபட கூடியவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
அந்த அளவிற்கு நற்செயலுக்குமுக்கியத்துவம் தந்துஇருக்கிறார் இறைவன்
இறை கட்டளையில் இறைவன் வாழ்கிறேன் என்று இறைவன் கூறுவதால் மனிதனுக்கு இறைவனுடைய கட்டளைகள் அவசியமாகிறது
இறைக் கட்டளைகளை பின்பற்றுவது என்பது இறைவனை பின்பற்றுவததாகும்
இறைவனின் விருப்பங்களை நிறைவேற்றுவதாகும்
இறைவனை அறியும் செயலாகும்
இந்த தகுதியை ஒரு மனிதன் பெற்றுவிட்டால் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை
அதனால்தான் சித்தர்கள் கூறுகிறார்கள் உடலே ஆலயம் என்கிறார்கள்
இறை கட்டளையை யார் பின்பற்றுகிறார்களோ அவரை மட்டும் தான் நான் விரும்புகிறேன் என்கிறார் அவரை தான் பாதுகாப்பேன் என்கிறார் அவருடைய வாழ்க்கையின் பொறுப்புக்களை தான் ஏற்றுக் கொள்கிறேன் என்கிறார்
இவ்வளவு சிறப்பு மிக்க தகுதியைமனிதன் பெற வேண்டும் என்றால் இறைவன் வகுத்த கொள்கைகள் மனிதனுக்கு அவசியமாகிறது
இறைக்கட்டளை இன் பதிவுகள் சிறு பகுதியை பதிவு செய்துள்ளோம் மற்றகட்டளைகளை பின்வரும் பதிவில் பார்ப்போம்
மனிதனுக்கு இறைவனின் இறைக்கட்டளை உயிரை விட உயர்வானது
ஓம் நமோ நாராயணாய வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
Comments