வாழ்க்கை

  மனிதனுக்கு இறை நம்பிக்கை ஏன் அவசியம்



இறைவனால் படைக்கப் பட்டவன் மனிதன் எனவே மனிதனைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவன்ஏற்க வேண்டியவனாக இருக்கிறான்  ஆனால்இறைவன் அனைத்து மனிதர்களின் வாழ்க்கையின் பொறுப்பை ஏற்றுக் கொள்வதில்லை யார்ஒருவர் இறை நம்பிக்கை கொள்கிறாரோ அவரை மட்டுமே பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறான் 

ஒவ்வொரு மனிதனையும் புதிய படை பலனாக செயல்பட வேண்டும் என்று படைக்கின்றான் அதற்கான ஆற்றலும் தருகின்றான் அந்த ஆற்றல் மேம்படுத்துவதற்கு சுதந்திரத்தையும் அறிவையும் தந்து தன் வாழ்க்கையை தானே நிர்வகித்துக் கொள்ளும் தகுதியை தந்திருக்கின்றார் 

ஏனெனில் இறைவனை சந்திக்கும் நாளில் ஒரவ்வொருமனிதனும் தான் செய்கின்ற செயல்களுக்கு பதில் தெரிவிக்க வேண்டிய கடமை இருபாபதால்

 மனிதன் தன் வாழ்க்கையைதானே நிர்வகித்து கொள்ளும் முழு சுதந்திரத்தை மனிதனுக்கு தந்திருக்கின்றான்

எனவே மனிதன் செய்கின்ற செயல்களுக்கு இறைவன் ஒருபோதும் பொறுப்பேற்பது இல்லை அனைத்து செயல்களுக்கும் அவரே காரண கர்த்தாவாக இருக்கின்றான்

 இதன் காரணமாகத்தான் மரணத்திற்குப்பின் அவன் செய்கின்ற செயல் நிலைக்கேற்ப  நன்மை தீமைகளை வழங்குகின்றான் சொர்க்க நரகம் என்று

மனிதன் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழ்க்கையும்  சந்திக்கின்ற நன்மை தீமை நிகழ்வுகள் அனைத்தும் முன்னோர்களின் கர்ம வினைப்படி வந்தவை  அதைமனிதன் தன்வாழ்க்கையில் அனுபவித்து தீர்க்க வேண்டிய இருக்கின்றான் மனிதன் இவ்வாறு முன்னோர்களின் கணக்கை அனுபவித்துபாவ பூன்னிய கனக்கை சரி செய்கிறான்

இதற்கு சாட்சியாக  இருப்பதுமகான்கள் புற்று நோயால் மரணித்த நிகழ்வு

ஒரு மனிதனுக்கு ஆண் வாரிசு உருவாகிறது என்றால் அவனுடைய பாவ கணக்குகள் தொடரும் என்பதே அறிகுறியாகும் 

எப்பொழுது ஒரு மனிதன் ஆண் வாரிசு அற்று மரணிக்கிறானோ அப்போது அவன் முன்னோர்களின் பாவ கணக்கில் அனைத்தும் தீர்க்கப்படுகின்றன

எனவே ஆண் வாரிசு இல்லாமல் மரணித்தவர்கள் தன் பாவ புண்ணிய கணக்குகளையும் முன்னோர்களின் பாவ புண்ணிய கணக்குகளையும் அணிவித்து கணக்கை நேர் செய்து விடுகிறான் எனவே அவன் மறுமை வாழ்க்கையில்  புதிய பயணத்தைத் தொடங்குகிறான்

இவ்வாறு அனைத்து மனிதர்களின் பாவ புண்ணிய கணக்குகளை வாரிசுகளை கொண்டு கணக்கை நேர் செய்கிறான்

மனிதன் என்பவன் பாவ புண்ணிய கணக்குகளை சரி செய்வதற்காகவே மனிதனை படைக்கிறான்

மனிதன் இறைவனை அடைய வேண்டுமென்றால் புண்ணிய செய்தால் மட்டுமே இறைவனை அடைய முடியும் அதற்காகவே பாவ புண்ணிய கணக்கை நிர்னயத்துள்ளார்

 மனிதன் மரணிக்கும் போது போது அவன் கொண்டு செல்வது பாவ புண்ணிய கணக்கு மட்டுமே அவன் இந்தப் பூவுலகில் சேர்த்து வைத்த செல்வங்களோ பதவிகளோ பொருட்களோ பட்டங்களோ எதையும் கொண்டு செல்வதில்லை

ஏனெனில் மனிதன் பிறக்கும்போது ஆன்மா உயிர் மனம் ஆகிய மூன்றை கொண்டுதான் படைக்கிறான் இவை மூன்றும் தான் அவனைப் பின் தொடர்கின்றன

இதில் மனம்தான் உனக்குரியது மற்ற இரண்டும் உனக்கு உதவி செய்யக் கூடியவன்

மனிதன் பிறவியிலிருந்து விடுபட வேண்டுமென்றால் மனம் இறைவன் வகுத்த பாதையில் செல்ல வேண்டும்
அதற்கு இறை நம்பிக்கை மனிதனுக்கு அவசியமா இருக்கிறது இறைக் கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியமாக இருக்கிறது இதை செய்யாமல் எந்த ஒரு மனிதனும் இறைவனை அடைய முடியாது

மனிதன் இறைவனை அடைய வேண்டும் என்பதற்காகவே இறைநம்பிக்கை அவசியமாகி வைக்கிறது

புண்ணியக் கணக்குகள் அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காகவே இறை நம்பிக்கையை தேவையாக உள்ளது

மனிதனுக்கு புண்ணிய கணக்கு ஏன் தேவைப்படுகிறது என்றால் அவன் மரணத்திற்கு பின் சிறப்பான உலகத்தில் வாழ வைப்பதற்காக புண்ணிய கணக்கை தேவையாக இருக்கிறது

பிரபஞ்சமே கணக்கில் அடிப்படையில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது அதன் அடிப்படையில்தான் மனித வாழ்க்கையும் புண்ணியக் கணக்கின் அடிப்படையில் செயல்படும் தன்மை கொண்டதாக இருக்கிறது

பூவுலகில் யார் பிறருக்காக வாழ்ந்து நற்செயல்கள் செய்து இருக்கிறார்களோ அவர்கள் மறுமையில் உயர்வான உலகத்தில் வாழ வைக்கப்படுகிறார் 

எந்த ஒரு மனிதனும் இறை நம்பிக்கை பெறாமல் வாழ்க்கையில் மேன்மை பெற முடியாது அவ்வாறு தான் வாழ்க்கையை அமைத்து இருக்கின்றான் இறைவன் அதற்காக தான் மனிதனுக்கு இறைநம்பிக்கை அவசியமாகிறது

வாழ்க்கையின் மேன்மையை என்பது சாந்தி சமாதானம் அமைதி நிம்மதி ஆகிய தன்மையில்மனம் செயல்பட வேண்டும்

இத்தகைய தன்மையில் வாழாத மனிதன் எத்தனை உயர்வான பதவியில் இருந்தாலும் செல்வங்கள் பெற்றிருந்தாலும் ஆட்சி அதிகாரம் பெற்றிருந்தாலும் அவர்கள் இறைவனின் அன்பை பெறாதவர்கள்

எனவே மனிதன் இறைவனின் அன்பை பெறுவதற்காகவே இறைநம்பிக்கை அவசியமாகிறது இறைக் கட்டளைகள் அவசியமாகிறது

இறையன்பு பெற்றவர்களே உயர்வானவர்கள் வெற்றியாளர்கள் விவேகா மாணவர்கள் சுகமான வாழ்க்கைக்கு உரியவர்கள்

மறுமையில் சிறப்பான வாழ்க்கையை பெற்றுக் கொள்ளும் தகுதி உடையவர்கள்

இதன் தொடர்ச்சி வரும் பதிவில் பார்ப்போம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்



Comments

Popular Posts