வாழ்க்கை

 அனுபவமே வாழ்க்கையின் மேன்மைக்கு ஆதாரம்



வாழ்க்கை என்பது சுகமாக வாழ்வதற்காக படைக்கப் பட்டிருக்கிறேன் என்கிறார் இறைவன் அதை அடைவதற்கு ஒவ்வொரு மனிதனும் எதன் அடிப்படையில் மேன்மை பெறுகிறான்  என்றால் அவன் சந்திக்கின்ற வேதனைகளும் துன்பங்களும் கூடிய நிகழ்வுகள் மூலம் பெறுகின்றான்

ஏனெனில் இத்தகைய இத்தகைய சூழ்நிலையில்தான் நாம் செய்த தவறுகள் என்ன ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை சிந்திக்கிறான் அப்போது அதற்கான விடையும் அறிந்து தெளிவு பெறுகிறான் இதன் காரணமாக மீண்டும் தவறான எண்ணங்கள் ஈடுபடாமல் நேர்வழி கான எண்ணங்களை உருவாக்கிக் கொள்கிறான்

இதை விடுத்து ஒரு மனிதனுக்கு நேர்வழி காண வழி முறைகளை கூறுவேன் ஆனால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டான்

மனிதன் நேர்வழி செல்வதற்காக எண்ணற்ற மகான்கள் எடுத்துக் கூறி விட்டார்கள் ஆனால் மக்கள் இதுவரை செயல்படுத்தவில்லை காரணம் அவர்களுக்கு மகான்களின் அறிவுரை கள் அவன் சந்திக்கின்ற பிரச்சினைகளுக்கு தெளிவைப் பெற்றுத் தரவில்லை எனவேதான் எந்த ஒரு மனிதனுடைய அறிவுரைகளும் என்று எந்த ஒரு மனிதனும் ஏற்று செயல்படுத்துவது இல்லை

மகான்களின்அறிவுரைகள்ஏற்றிருந்தால் மனிதர்கள்சுகமாக வாழ்ந்திருப்பார்கள்

எனவே மனிதனின் நேர்மையை நோக்கி பயணிக்க வேண்டுமென்றால் அவன் சந்திக்கின்ற வேதனைகளும் துன்பங்களும் தான் அவனுக்கு உதவி புரிகின்றன

ஏனெனில் ஒரு மனிதன் துன்பங்களையும் வேதனை அனுபவிக்கும் போதுதான் எண்ணற்ற பாடங்களை கற்றுக் கொள்கிறான் தான் யார் தன்னைச் சுற்றி இருப்பவர் யார் கடவுள் என்பவர் யார் என்ற அனைத்தையும் அறிந்து கொள்கிறான்

ஒரு மனிதன் சந்திக்கின்ற வேதனைகள் விதியின்படி அமைந்திருந்தாலும் அந்த வேதனையான சூழ்நிலையில்தான் ஒரு மனிதன் அறிவில் தெளிவு பெறுகிறான்

தெளிவு பெற்ற மனம் தான் எச்செயல் நன்மையைத் தரும் எச்செயல் தீமையை தரும் என்பதைமனம் அறிந்து கொள்கிறது

இதனால் அவனுடைய வாழ்க்கைப் பயணம் சுகமான பாதையில் பயணிக்கும் தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது

எந்த ஒரு மனிதன் சந்திக்கின்ற வேதனையின் போது அறிவு தெளிவு பெறவில்லையோ அவன்நரக வாழ்க்கைக்குரிய பாதையை அமைத்துக் கொள்கிறான்

உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் வேதனையை சந்திக்காமல் தன் வாழ்க்கை பயணத்தை கடக்க இயலாத தன்மையில் இறைவன் அமைத்து இருக்கிறான்

ஏனெனில் அனைத்து மனிதர்களும் நேர்வழியில் பயணிக்க வேண்டும் என்பதற்காக

எனவே ஒவ்வொரு மனிதனும் தான் சந்திக்கின்றவேதனையான அனுபவத்தின் மூலமே அறிவில் தெளிவைப் பெற்று சுகமான வாழ்க்கை வாழும் தன்மையுடையவனாக பயனிக்கின்றான்

எனவே ஒரு மனிதனுடைய அனுபவங்கள் தான் அவனை உயர்வான நிலைக்கு இட்டுச் செல்கிறது

ஒரு மனிதன் சந்திக்கின்ற வேதனைகள் விதியின் வசத்தால் வந்ததா இருப்பினும் அவனை மேன்மைப் படுத்தவதற்க்கும் தன்வாழ்க்கையின் தரத்தை உயர்த்திக் கொள்வதற்கும் அவன் பெற்ற விதியின் பயனே

இவ்வாறு மனித வாழ்க்கை தீமைகளில் நன்மைகள் விளையும் படி அமைத்து இருக்கின்றான் இறைவன்

மனித வாழ்க்கையை உற்று நோக்கினால் வேதனையை சந்திக்காத மனிதன் தன் அறிவில்மேன்மை பெறதவனாக வாழ்ந்து மடிந்து இருப்பான்

எனவே ஒரு மனிதருடைய மேன்மையான வாழ்க்கை தன் அனுபவத்தால் மட்டுமே உயர்த்திக் கொள்கிறான்

எனவே அனுபவமே ஆசான் அனுபவமே குரு அனுபவமே கடவுள்

ஓம் நமோ நாராயணாய வாழ்க வையகம் வாழ்க வளமுடன்





Comments